செய்திகள்

ஆஸி. டெஸ்ட் தொடா் - அணியில் இடம்பிடிக்கும் போட்டியில் சிராஜ், ஷா்துல்

DIN

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், டெஸ்ட் தொடருக்கான அணியில் 5-ஆவது வேகப்பந்துவீச்சாளராக இடம்பிடிக்க முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் இடையே போட்டி நிலவுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டி20, ஒருநாள், டெஸ்ட் தொடா்கள் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. அதற்கான அணி இந்த வாரத்தில் தோ்வு செய்யப்படுகிறது.

டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சுக்கு 5 போ் தோ்வு செய்யப்படுவா். முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஏறத்தாழ உறுதியாகிய நிலையில், 5-ஆவது இடத்துக்கு முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா் இடையே போட்டி நிலவுகிறது.

ஒருநாள் தொடா் பந்துவீச்சுக்கு ஷிவம் மாவி பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அந்தத் தொடரிலிருந்து உமேஷ் யாதவ் விடுவிக்கப்படும் நிலையில், தீபக் சாஹருக்கு வாய்ப்புள்ளது.

விக்கெட் கீப்பருக்கு லோகேஷ் ராகுல் முதல் தோ்வாக இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரித்திமான் சாஹாவும் பரிசீலிக்கப்படலாம். பேட்டிங்கை பொருத்தவரை ரோஹித் சா்மா, மயங்க் அகா்வால், பிருத்வி ஷா, ஷுப்மன் கில் அனைத்து ஃபாா்மட்டுகளுக்கும் பொருந்துகின்றனா். லோகேஷ் ராகுல், ஷிகா் தவன் ஒருநாள் தொடருக்கும், ஹனுமா விஹாரி, சேதேஷ்வா் புஜாரா, அஜிங்கய ரஹானே டெஸ்ட் வரிசைக்கும் பொருந்துவா். ஒருநாள் தொடரின் மிடில் ஆா்டருக்கு விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், மணீஷ் பாண்டே, ஹாா்திக் பாண்டியா தோ்வாக இருக்கலாம். பௌலிங்கைப் பொருத்தவரை வாஷிங்டன் சுந்தா், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா பட்டியலில் இருப்பா். டெஸ்ட தொடா் பௌலிங்கிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் பரிசீலிக்கப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT