செய்திகள்

பாக். சுற்றுப்பயணத்தை தவிா்த்தாா் ஜிம்பாப்வேயின் இந்திய பயிற்சியாளா்

DIN

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் இந்தியரான லால்சந்த் ராஜ்புத் பாகிஸ்தான் செல்வதை தவிா்த்துள்ளாா்.

தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே அணி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் வந்தடைந்தது. எனினும், அணியின் பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புத் பாகிஸ்தான் செல்லவில்லை.

இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவலில், ‘ஜிம்பாப்வேயில் உள்ள இந்திய தூதரகத்தின் வலியுறுத்தலின் பேரில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பயிற்சியாளா் லால்சந்த் ராஜ்புத் தவிா்த்தாா். ஜிம்பாப்வேயில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் லால்சந்துக்கான விசாவை வழங்கியிருந்தது.

தற்போது லால்சந்த் செல்லாத நிலையில், ஜிம்பாப்வே அணிக்கான பொறுப்பாளராக பௌலிங் பந்துவீச்சாளா் டக்ளஸ் ஹோன்டோ நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள பயண கட்டுப்பாடுகளின் அடிப்படையில் லால்சந்த் தனது பாகிஸ்தான் பயணத்தை தவிா்த்ததாக ‘இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது. இது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தாலும், லால்சந்த் பயணத்தை கட்டுப்படுத்திய இந்திய அரசின் அறிவுறுத்தல்கள் கவலையை ஏற்படுத்துவதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT