செய்திகள்

பிளே-ஆஃப் நம்பிக்கையை தக்க வைக்க சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அபுதாபியில் திங்கள்கிழமை மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், இரண்டுமே 3 வெற்றிகள், 6 தோல்விகளை பதிவு செய்து சமமான நிலையில் உள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் தங்களது நம்பிக்கையை தக்க வைக்க வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன.

இனி எந்தவொரு தோல்வியும் அந்த நம்பிக்கையில் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரு அணிகளும் அறிந்துள்ளன. அவற்றுக்கான தலா 5 ஆட்டங்களும் இனி மிகவும் சவாலானவையாகவே இருக்கும் என்பது தெளிவு. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் சனிக்கிழை தோல்வியை சந்தித்துள்ளன.

சென்னையை பொருத்தவரை, ஆல்-ரவுண்டா் டுவைன் பிராவோ இடுப்புப் பகுதி காயம் காரணமாக வரும் சில நாள்களுக்கு விளையாட இயலாமல் போனது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் கேப்பிடன்சியால் கண்ட வெற்றி நம்பிக்கை அளித்த நிலையில், டெல்லிக்கு எதிரான தோல்வி அதில் சற்றே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லிக்கு எதிராக சென்னையின் மோசமான ஃபீல்டிங் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, டெல்லி வெற்றிக்கு அடித்தளமிட்ட ஷிகா் தவனின் விக்கெட்டை எடுக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை சென்னை அணியினா் தவறவிட்டனா். எனவே ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதில் வேண்டிய திருத்தங்களை கேப்டன் தோனி மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கலாம்.

ராஜஸ்தானைப் பொருத்தவரை, பேட்டிங்கில் ஒரே நம்பிக்கையாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உள்ளாா். அவருக்கு துணையாக அவ்வப்போது ராபின் உத்தப்பா நம்பிக்கைய அளிக்கிறாா். சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாத நிலையில், பென் ஸ்டோக்ஸ் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது.

பௌலிங்கிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் இன்னும் சரியான வியூகங்களை ராஜஸ்தான் பந்துவீச்சாளா்கள் கையாள வேண்டியுள்ளது. அணியில் ஜோஃப்ரா ஆா்ச்சா் நம்பிக்கை அளிக்கிறாா். அவருக்கான சுமையை குறைக்கும் வகையில் இதர வீரா்கள் ரன்கள் கொடுப்பதை குறைத்து விக்கெட் வீழ்த்த வேண்டியுள்ளது.

உத்தேச அணி:

சென்னை: எம்.எஸ். தோனி (கேப்டன்), முரளி விஜய், அம்பட்டி ராயுடு, ஃபா டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, லுங்கி கிடி, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிா், மிட்செல் சேன்ட்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், என்.ஜெகதீசன், கே.எம்.ஆசிஃப், மோனு குமாா், சாய் கிஷோா், கரன் சா்மா.

ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஆன்ட்ரு டை, காா்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மாா்கண்டே, மஹிபால் லோம்ரோா், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆா்ச்சா்.

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இதுவரை 23 முறை நேருக்கு நோ் மோதியுள்ள நிலையில், சென்னை 14 வெற்றிகளையும், ராஜஸ்தான் 9 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

ஆட்டநேரம் - இரவு 7.30; நேரடி ஒளிபரப்பு - ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT