ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் சர்பராஸ் அகமது, சோயிப் மாலிக், முகமது அமிர் ஆகிய பாகிஸ்தானின் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி நாளை பாகிஸ்தானுக்கு வருகிறது. ராவல்பிண்டியில் ஒருநாள் தொடர் அக். 30, நவம்பர் 1, 3 தேதிகளில் நடைபெறும். நவம்பர் 7, 8, 10 தேதிகளில் லாகூரில் டி20 தொடர் நடைபெறும்.
இந்த இரு தொடர்களுக்கான 22 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒருநாள், டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி பிறகு அறிவிக்கப்படும். 22 பேர் கொண்ட அணியில் சர்பராஸ் அகமது, சோயிப் மாலிக், முகமது அமிர் ஆகிய மூத்த வீரர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
பாகிஸ்தான் அணி: பாபர் அஸாம், ஹைதர் அலி, அப்துல்லா சஃபிக், இமாம் உல் ஹக், ஹாரிஸ் சொஹைல், அபித் அலி, ஃபகார் ஸமான், முகமது ஹபீஸ், குஷ்தில் ஷா, முகமது ரிஸ்வான், இஃப்திகர் அகமது, ஃபஹீம் அஷ்ரப், இமாத் வாசிம், ரொஹைல் நசீர், சதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, முகமது ஹைஸ்நைன், ஹாரிஸ் ராஃப், முசா கான், வஹாப் ரியாஸ், உஸ்மான் காதர், சஃபர் கோஹர்.