செய்திகள்

பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!

17th Oct 2020 10:50 AM

ADVERTISEMENT

 

பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

36 வயது உமர் குல், பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்டுகள், 130 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

2002-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் விளையாடிய உமர் குல், 2003-ல் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமானார். டெஸ்டில் கடைசியாக 2013-ல் விளையாடினார். ஒருநாள், டி20 சர்வதேச ஆட்டங்களைக் கடைசியாக 2016-ல் விளையாடினார். 

ADVERTISEMENT

2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார். அதேபோல 2009-ல் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோதும் அதே பெருமை அவருக்குக் கிடைத்தது.

Tags : Umar Gul
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT