செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு கரோனா பாதிப்பு

17th Oct 2020 11:18 AM

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மன்ஷி ஜோஷி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான மன்ஷி ஜோஷி இந்திய அணிக்காக இதுவரை 11 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய மற்றும் சர்வதேச வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் வெலாசிட்டி அணியில் மன்ஷி ஜோஷி இடம்பெற்றிருந்தார். 

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் மன்ஷி ஜோஷி பாதிக்கப்பட்டுள்ளார். இந்திய வீராங்கனைகள் அனைவரும் மும்பையில் ஒன்றுகூடி அங்கு 9 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனைவரும் செல்கிறார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மன்ஷி ஜோஷி மும்பைக்குச் செல்லவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக மிதாலி ராஜ் தலைமையேற்கும் வெலாசிட்டி அணியில் 26 வயது மேக்னா சிங் சேர்க்கப்பட்டுள்ளார். 

Tags : Mansi Joshi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT