செய்திகள்

நியூசிலாந்தின் வயதான டெஸ்ட் வீரர் ஜான் ரீட் காலமானார்

14th Oct 2020 04:27 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜான் ரீட் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 92.

நியூசிலாந்து அணிக்காக 58 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஜான் ரீட், 246 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். முதல் டெஸ்டை 1949-ல் விளையாடிய ரீட், 1965-ல் தனது கடைசி டெஸ்டை விளையாடினார். மேலும் 1993 முதல் 2002 வரை 50 டெஸ்டுகள், 98 ஒருநாள் ஆட்டங்களில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். தேர்வாளராகவும் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார், இல்லயென்றாலும் ஆல்ரவுண்டரான ரீட், மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்திருப்பார். 

ADVERTISEMENT

குடல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக 2013-ல் ரீட் அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியவர்களில் உயிருடன் உள்ள 5-வது வயதான வீரர், நியூசிலாந்தின் வயதான டெஸ்ட் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்திருந்தார். இந்நிலையில் ஆக்லாந்தில் இன்று ஜான் ரீட் காலமாகியுள்ளார்.   

1963-ல் இங்கிலாந்துக்கு எதிராக ரீட் சதமடித்தபோது நியூசிலாந்து அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இன்றைக்கும் ஓர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோரில் எடுக்கப்பட்ட சதமாக அது மதிப்பிடப்படுகிறது. 3428 டெஸ்ட் ரன்களும் 85 டெஸ்ட் விக்கெட்டுகளும் ரீட் எடுத்துள்ளார். 1956-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது நியூசிலாந்து அணி. அப்போது கேப்டனாக இருந்தவர் ஜான் ரீட். 34 டெஸ்டுகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். 

Tags : New Zealand John Reid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT