செய்திகள்

டெல்லிக்கு சவால் அளிக்குமா ராஜஸ்தான்?

14th Oct 2020 03:06 AM | துபை,

ADVERTISEMENT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபையில் புதன்கிழமை மோதுகின்றன. 
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், டெல்லி 5 வெற்றிகளையும், ராஜஸ்தான் 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. இதில் தொடர்ச்சியாக வென்றுவந்த டெல்லி கடைசி ஆட்டத்தில் தோல்வியையும், தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்த ராஜஸ்தான் கடைசி ஆட்டத்தில் வெற்றியையும் பதிவு செய்தன. 
கடந்த வாரம் இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் டெல்லி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை, பென் ஸ்டோக்ஸ் அணிக்குத் திரும்பியிருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பெரிதாக சோபிக்காவிட்டாலும், ஆல்-ரவுண்டராக அணிக்கு வலு சேர்க்கிறார். 
பேட்டிங்கில் ராஜஸ்தானின் டாப் ஆர்டர் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளது. தொடக்கத்தில் ஆடும் பேட்ஸ்மேன்கள் போதிய ரன்களை சேர்க்காததால், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான நெருக்கடி அதிகரிக்கிறது. குறிப்பாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்க அளவு ரன்களை சேகரிக்கத் தவறுகின்றனர். 
ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடினாலும், அவரால் அதை நிலையாகத் தொடர இயலவில்லை. கடைசி ஆர்டரில் வந்தாலும் ராகுல் தெவதியா பேட்டிங் திறனால் அணியைத் தாங்குகிறார். பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயஸ் கோபால் போன்றோரும் பெüலிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துகின்றனர். 
டெல்லி அணியைப் பொருத்தவரை, அனுபவமிக்க மும்பைக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தாலும், பேட்டிங், பெüலிங் ஆகியவற்றில் அந்த அணியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. 
பிருத்வி ஷா, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஷிகர் தவன், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் போன்றோர் பேட்டிங்கில் வலு கூட்டுகின்றனர். ககிசோ ரபாடா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் உள்ளிட்டோர் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை பதம் பார்க்கின்றனர். மும்பையிடம் தோல்வியடைந்த டெல்லி, நிச்சயம் மீண்டெழுந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு வர முயற்சிக்கும். 

ராஜஸ்தான் (உத்தேச அணி)
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், 
ஆன்ட்ரு டை, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மார்கண்டே, மஹிபால் லோம்ரோர், ஓஷேன் தாமஸ், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், டேவிட் மில்லர், மனன் வோரா, சஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
டெல்லி (உத்தேச அணி)
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவன், ரவிச்சந்திரன் அஸ்வின், பிருத்வி ஷா, ஷிம்ரோன் ஹெட்மயர், ககிசோ ரபாடா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல், சந்தீப் லேமிஷேன், கீமோ பால், டேனியல் சாம்ஸ், மோஹித் சர்மா, அன்ரிச் நார்ட்ஜே, அலெக்ஸ் கேரி, அவேஷ் கான், 
துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், லலித் யாதவ். 
நேருக்கு நேர்
இதுவரை டெல்லி-ராஜஸ்தான் அணிகள் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ராஜஸ்தான் 11 வெற்றிகளையும், டெல்லி 10 வெற்றிகளையும் 
பதிவு செய்துள்ளன. 
ஆட்ட நேரம்
இரவு 7.30
நேரடி ஒளிபரப்பு
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT