செய்திகள்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன்: 2-ஆவது சுற்றில் வாவ்ரிங்கா

14th Oct 2020 02:51 AM

ADVERTISEMENT

சென்ட் பீட்டர்ஸ்பர்க், அக். 13: சென்யிட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-ஆவது சுற்றுக்கு ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா முன்னேறினார். 
போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருக்கும் அவர் தனது முதல் சுற்றில் பிரிட்டனின் டேன் இவான்ûஸ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் வாவ்ரிங்கா 3-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 
வாவ்ரிங்கா தனது 3-ஆவது சுற்றில் வைல்ட் கார்டு வீரரான ரஷியாவின் ஈவ்ஜினி டான்ஸ்காயை எதிர்கொள்கிறார். ஈவ்ஜினி தனது முந்தைய சுற்றில் பெலாரஸின் இகோர் கெராசிமோவை 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் வீழ்த்தியிருந்தார். 
இதர ஆட்டங்களில் பிரிட்டனின் கேமரூன் நோரி 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் வென்று, போட்டித்தரவரிசையின் 8-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு அதிர்ச்சியளித்தார். போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் குரோஷியாவின் போர்னா கோரிச் 6-3, 7-6 (7/2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் ஃபெலிசியானோ லோபûஸ வீழ்த்தினார். 
போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் மிலோஸ் ரயோனிச் 7-6 (7/5), 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜெஃப்ரி ஜான் வோல்ஃபை வென்றார். பெலாரஸின் இலியா இவாஷ்கா 6-3, 7-6 (8/6) பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை தோற்கடித்தார். செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச் 6-3, 7-6 (9/7) என்ற செட்களில் கஜகஸ்தானின் மிஹைல் குகுஷ்கினை வீழ்த்தினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT