செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்

7th Oct 2020 10:46 AM

ADVERTISEMENT

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குப் பிரபல வீரர் நடால் முன்னேறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. 

இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் 19 வயது சின்னரை நடால் எதிர்கொண்டார். இதில் 7-6(4), 6-4, 6-1 என்கிற நேர் செட்களில் நடால் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவர் விளையாடியுள்ள 100-வது ஆட்டம் இது. 

ADVERTISEMENT

இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 13-வது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளார் நடால். 

பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடியுள்ள 100 ஆட்டங்களில் 98-ல் நடால் வென்றுள்ளார். 

Tags : Nadal French Open
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT