செய்திகள்

ஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரர் விலகல்

7th Oct 2020 09:57 AM

ADVERTISEMENT

 

அபுதாபி: ஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரரான அலி கான் காயம் காரணமாக போட்டித்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் அலி கான். வேகப்பந்து வீச்சாளர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் லீக் டி 20 கிரிக்கெட் போட்டித்தொடரில் கோப்பையை வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியவர்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான ஹாரி குர்னி காயம் அடைந்தைத் தொடர்ந்து அவருக்கு மாற்று வீரராக அலி கான் கொல்கத்தா அணி நிர்வாகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் ஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரர் என்ற சிறப்பினை அலி கான் பெற்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் அலி கான் காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டித்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT