செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: அசரென்கா அதிர்ச்சித் தோல்வி

DIN

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா அதிர்ச்சித் தோல்வியடைந்தார். 

அதேநேரத்தில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்கா 2-6, 2-6 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 161-ஆவது இடத்தில் உள்ள ஸ்லோவேகியாவின் அன்னா கரோலினாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.  

உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா தனது 2-ஆவது சுற்றில் 6-3, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் மெக்ஸிகோவின் ரெனெட்டா ஜெரேஸýவாவை வீழ்த்தினார். நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் 7-6 (5), 3-6, 9-7 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சாரா எர்ரானியை தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ஆவது சுற்றில் நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர், தனது 2-ஆவது சுற்றில் 6-1, 6-0, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டை வீழ்த்தினார். 

இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் 95-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் நடால். பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்லும்பட்சத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (20) வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாதனையை சமன் செய்வார். 

ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டொமினிக் கோபரை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரும், போட்டித் தரவரிசையில் 21-ஆவது இடத்தில் இருந்தவருமான ஜான் இஸ்னரை வீழ்த்தி 3-ஆவது சுற்றை உறுதி செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT