செய்திகள்

12 வருடங்களில் 250 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி

DIN

2008, ஆகஸ்ட் 18 அன்று இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் விராட் கோலி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய 2-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 ஆட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இந்த இலக்கை எட்டிய 9-வது இந்திய வீரர், கோலி. (சேவாக், இந்திய அணிக்காக 241 ஆட்டங்களிலும் ஆசிய, உலக லெவன் அணிகளுக்காக 10 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.)

இந்திய அணிக்காக இதுவரை 250 ஒருநாள், 82 டி20, 86 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார் கோலி. 

அதிக ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளவர், சச்சின் டெண்டுல்கர். 463 ஆட்டங்களில் விளையாடி, 18,426 ரன்கள் எடுத்துள்ளார். 49 சதங்கள். 

அதிக ஒருநாள் ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடிய வீரர்கள்

சச்சின் - 463
தோனி - 347
ராகுல் டிராவிட் - 340
அசாருதீன் - 334
கங்குலி - 308
யுவ்ராஜ் சிங் - 301
அனில் கும்ப்ளே - 269
கோலி - 250

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT