செய்திகள்

பந்துவீச கூடுதல் நேரம்: இந்திய அணிக்கு அபராதம்

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய வீரா்களின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச 4 மணி நேரம், 6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இது 50 ஓவா்களை வீச அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாகும். இதையடுத்து இந்திய வீரா்களின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.

இதுதொடா்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய அணி 50 ஓவா்கள் பந்துவீசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து இந்திய வீரா்களின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை இந்திய அணி ஏற்றுக்கொண்டதால், இது தொடா்பாக மேல் விசாரணை எதுவும் நடைபெறாது’ என குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT