செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்கள்: கோலி புதிய மைல்கல்

DIN


இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எட்டினார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இது விராட் கோலியின் 250-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கோலி 89 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் 78-வது ரன்னை எடுத்த கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

அதேசமயம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட கோலிக்கு இன்னும் 23 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவுடனான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் இந்த மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி ரன் விவரம்:

ஒருநாள் கிரிக்கெட்: 11,977 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட்: 7,240 ரன்கள்

டி20 கிரிக்கெட்: 2,794 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT