செய்திகள்

கேஎல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டேன்: மேக்ஸ்வெல்

DIN


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டதாக நகைச்சுவையாக டிவீட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 374 ரன்கள் குவித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

இதேபோல் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டமும் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் நீஷம் 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

மேக்ஸ்வெல் மற்றும் நீஷம் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிக்காக விளையாடினர். இருவருக்குமே ஐபிஎல் சிறப்பாக அமையவில்லை. கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப்புக்காக 13 ஆட்டங்களில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  நீஷம் 5 ஆட்டங்களில் விளையாடி பேட்டிங்கில் 19 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அணியில் பிரதான வீரர்களான இவர்களது மோசமான ஆட்டம் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடாமல், சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டு கேலி செய்யும் வகையில் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராகுலின் புகைப்படத்தைக் கொண்டு மீம் வகையில் கேலி செய்திருந்தார் அந்த ரசிகர். 

நீஷம் இதை அவரது சுட்டுரைப் பக்கத்தில் மேக்ஸ்வெல்லைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகப் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவின் கீழே,"நான் பேட் செய்தபோது ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன்" என்று மேக்ஸ்வெல் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT