செய்திகள்

கரோனாவால் பிரபல கிரிக்கெட் வீரர் பாதிப்பு

28th Nov 2020 01:30 PM

ADVERTISEMENT

 

நேபாளத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிசானே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிபிஎல்டி20 போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சந்தீப் லாமிசானே, ட்விட்டரில் கூறியதாவது:

நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். புதன்கிழமை எனக்கு உடல்வலி ஏற்பட்டது. இப்போது உடல்நலம் தேறி வருகிறேன். எல்லாம் சரியாக நடந்தால் மீண்டும் (பிபிஎல் போட்டியில்) விளையாட வருவேன். எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியில் தில்லி அணியில் இடம்பெற்றிருந்தார். எனினும் ஓர் ஆட்டத்திலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

பிபிஎல் போட்டியின் முதல் நான்கு ஆட்டங்களை சந்தீப் லாமிசானேவால் விளையாட முடியாது. டிசம்பர் மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார். இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, டிசம்பர் 27 அன்று நடைபெறவுள்ள ஹோபர்ட் - பிரிஸ்பேன் ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Tags : Hobart Hurricanes Lamichhane
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT