செய்திகள்

பந்துவீசாதது ஏன்?: ஹார்திக் பாண்டியா பதில்

28th Nov 2020 12:25 PM

ADVERTISEMENT

 

சர்வதேச ஆட்டத்தில் தன்னால் பந்துவீச முடியாத காரணத்தை இந்திய அணி பேட்ஸ்மேன் பாண்டியா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்து தோல்வி கண்டது.

ADVERTISEMENT

நேற்றைய ஆட்டத்தில், சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஹாா்திக் பாண்டியா 76 பந்துகளில் 4 சிக்ஸா், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ஆட்டம் முடிந்த பிறகு பாண்டியா கூறியதாவது:

பந்துவீசுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். முக்கியமான போட்டிகளில் 100 சதவீத உடற்தகுதியுடன் பந்துவீச வேண்டும் என நினைக்கிறேன். உலகக் கோப்பைப் போட்டிகள் வருகின்றன. முக்கியமான தொடர்களும். எனவே தேவைப்படும்போது பந்துவீசுவேன். 

நீண்ட காலத் திட்டத்துடன் யோசிக்கிறேன். குறுகிய காலத்தில் யோசித்து, சோர்வடைந்து போய், பந்துவீச முடியாமல் ஆகிவிடக் கூடாது. முறையான பயிற்சிகளையும் திட்டங்களையும் பின்பற்றுகிறேன். எப்போது பந்துவீசப் போகிறேன் என்று நான் சொல்லமாட்டேன். பயிற்சியின்போது நான் பந்துவீசிக் கொண்டிருக்கிறேன். எனினும் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடுவதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. சர்வதேச அளவில் பந்துவீசுவதற்கான நம்பிக்கையும் திறமையும் தேவைப்படுகிறது. இந்திய அணிக்கு பந்துவீச 6-வதாக வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட ஒரு வீரரை நாம் கண்டுபிடித்து அவரின் திறமையை மெருகேற்ற வேண்டும் என்றார். 

Tags : Hardik Pandya bowling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT