செய்திகள்

தோனி மீது அச்சம் கொண்ட பிசிசிஐ நிர்வாகிகள்: ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு

DIN

பிசிசிஐயும் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவும் தோனியைக் கண்டு அஞ்சியதாக வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும் என்று அறிவித்தது. இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம்பெற்றார்கள். 

எனினும் குறுகிய காலத்தில் தனது பதவியை குஹா ராஜிநாமா செய்துவிட்டார். இந்திய கிரிக்கெட்டில் நிலவி வரும் சூப்பர் ஸ்டார் கலாசாரம், இரட்டை ஆதாய விவகாரத்தில் தீர்வு காணாதது, அனில் கும்ப்ளே விவகாரத்தைக் கையாண்ட விதம் ஆகியவற்றின் காரணமாகப் பதவியை ராஜிநாமா செய்ததாக அவர் கூறினார். 

இந்நிலையில் கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ நிர்வாகம் பற்றி குஹா கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி விளையாடுவதில்லை என தோனி முடிவெடுத்தார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடினார். இதனால் தோனிக்கு ஒப்பந்தத்தில் ஏ கிரேட் வழங்கக் கூடாது என நிர்வாகக் குழுவில் சொன்னேன். அந்த ஒப்பந்தம் வருடம் முழுவதும் விளையாடும் வீரர்களுக்கானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை என்பது அவர் எடுத்த முடிவு. நல்லது. தகுதியிருந்தால் அவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தேர்வு செய்யலாம். 

தோனியின் ஒப்பந்தத்தை தகுதியிறக்கம் செய்யப் பயப்படுவதாகத் தெரிவித்தார்கள். பிசிசிஐ நிர்வாகிகள் மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் நியமித்த, மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமை தாங்கிய நிர்வாகக் குழுவும் தயங்கினார்கள். இது மிகவும் பிரச்னைக்குரியதாக எனக்குத் தோன்றியது. நான் அங்கிருந்தபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT