செய்திகள்

8 சிக்ஸர்கள் அடித்த பொலார்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 180 ரன்கள் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி

DIN

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் இன்று முதல் ஆக்லாந்தில் தொடங்கியுள்ளது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு டி20 ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகின்றன. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

ஆக்லாந்தில் இன்று தொடங்கிய முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மே.இ. தீவுகள் தொடக்க வீரர் பிளெட்சர், 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டை (பிளெட்சர்) 4-வது ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது இழந்தது மே.இ. தீவுகள் அணி. அடுத்த 5 விக்கெட்டுகளை 1 ரன்னுக்கு இழந்து அதிர்ச்சியளித்தது. ஹெட்மையர், பவல் ரன் எதுவும் எடுக்காமலும் பூரன் 1 ரன்னிலும் கிங் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதில் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஃபேபியன் ஆலன் - பொலார்ட் சிறப்பாக விளையாடினார்கள். ஃபேபியன் ஆலன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார் ஃபெர்குசன். 

மழை காரணமாக ஆட்டம் 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. பொலார்ட் 37 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி.எல்.எஸ். முறையில் நியூசிலாந்து அணிக்கு 16 ஓவர்களில் 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT