செய்திகள்

சிட்னி ஒருநாள் ஆட்டம்: 374 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய சாதனைகள்

27th Nov 2020 03:43 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஸ்மித் ஆகியோர் சதமடித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

374/6

ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.

இதற்கு முன்பு நான்கு முறை இந்தியாவுக்கு எதிராக 359 ரன்களை எடுத்துள்ளது ஆஸி. அணி. இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச 3-வது ஸ்கோர் இது. இதற்கு முன்பு, 2015-ல் மும்பையில் தென் ஆப்பிரிக்கா 438/4 ரன்களும் 2009-ல் ராஜ்கோட்டில் இலங்கை 411/8 ரன்களும் எடுத்துள்ளன.

62 

62 பந்துகளில் சதமடித்துள்ளார் ஸ்மித். ஆஸ்திரேலிய அணியில் 3-வது அதிவேக சதமாகும். இதற்கு முன்பு மேக்ஸ்வெல் 51 பந்துகளிலும் ஜேம்ஸ் ஃபாக்னர் 57 பந்துகளிலும் சதமடித்துள்ளார்கள். 

95.66

இந்தியாவுக்கு எதிராக குறைந்தது ஐந்து ஆட்டங்கள் விளையாடிய தொடக்க வீரர்களில் வார்னரும் ஃபிஞ்சும் 95.66 ரன்கள் சராசரி வைத்துள்ளார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 13 ஆட்டங்களில் 1148 ரன்கள் எடுத்துள்ளது இந்தக் கூட்டணி. முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 4 சதங்களும் 4 அரை சதங்களும் எடுத்துள்ளது. சதங்களைக் கடந்தபோது இந்தக் கூட்டணி எடுத்த ரன்கள் - 187, 231, 258*, 156.

5

ஸ்மித்தின் 62 பந்துகள் சதம் - இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட 5-வது ஒருநாள் அதிவேக சதமாகும். 2005-ல் கான்பூரில் பாகிஸ்தானின் அப்ரிடி 45 பந்துகளில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்து சாதனை செய்தார். 

இது, ஸ்மித்தின் 10-வது ஒருநாள் சதம்.

288

ஆஸ்திரேலியாவின் முதல் மூன்று வீரர்கள் எடுத்துள்ள ரன்கள் - 288. இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் எடுத்த அதிக ரன்களில் இதற்கு 3-வது இடம். 

4

இந்தியாவின் ஐந்து பந்துவீச்சாளர்களில் நான்கு பேர் தலா 10 ஓவர்கள் வீசி குறைந்தது தலா 60 ரன்களைக் கொடுத்துள்ளார்கள். இதுபோல இந்திய அணிக்கு நேர்வது 2-வது முறை. 2018-ல் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக இதுபோல நடைபெற்றது. இன்று, நன்கு பந்துவீசிய ஷமியும் 10 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்தார்.

Tags : Australia stats
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT