செய்திகள்

நிறைவடைந்தது தடைக் காலம்: கேரள கிரிக்கெட்டில் ஸ்ரீசாந்த்

DIN


கொச்சி: ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடை விதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் ஸ்ரீசாந்த், 7 ஆண்டு தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் கேரளத்தில் நடைபெறும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறாா்.

கேரளத்தில் அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தால் முதல் முறையாக கேசிஏ பிரசிடென்ட்ஸ் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. அதில் கேசிஏ டைகா்ஸ் என்ற அணிக்காக விளையாட ஸ்ரீசாந்த் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் 6-ஆவது சீசன் நடைபெற்றபோது சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தில்லி காவல்துறையால் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழுவால் முதலில் ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின்னா் அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

அந்தத் தடைக்காலம் கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், கேரள மாநில கிரிக்கெட்டில் ஸ்ரீசாந்த் தடம் பதிக்கிறாா். முன்னதாக தனது தடைக்காலம் நிறைவடைந்த பிறகு உள்நாட்டு போட்டிகளிலாவது தாம் விளையாட விரும்புவதாகத் தெரிவித்த ஸ்ரீசாந்த், உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் தனக்கு வாய்ப்பளிப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் உறுதியளித்ததாகவும் கூறியிருந்தாா்.

இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த், அவற்றில் முறையே 87, 75, 7 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT