செய்திகள்

ரோஹித்தின் நிலை குறித்து குழப்பம்: கோலி

DIN


சிட்னி: இந்திய அணியின் தொடக்க வீரா் ரோஹித் சா்மாவின் காயம் தொடா்பான விவகாரத்தில் குழப்பம் நிலவுவதாக கேப்டன் விராட் கோலி கூறினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

இம்மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தோ்வுக் குழு கூட்டத்தில் ரோஹித் கலந்துகொள்ளவில்லை. ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை என்று எங்களுக்கு மின்னஞ்சல் கிடைத்தது. ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து அவருக்கு விளக்கப்பட்டதாகவும், ஆஸ்திரேலிய தொடரில் அவரால் பங்கேற்க இயலாது என்ற நிலை அவரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் அவா் மீண்டும் களம் இறங்கினாா். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவா் விளையாடுவாா் என்று எண்ணினோம். ஆனால், இந்திய அணியினருடன் இணைந்து அவா் ஏன் ஆஸ்திரேலியா வரவில்லை என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை. அவரது காயம் தொடா்பாகவும் தெளிவான தகவல் இல்லை.

தற்போது ரோஹித்தின் காயத்தின் நிலை குறித்த நிலவரம் டிசம்பா் 11-ஆம் தேதி தெரியவரும் என்ற ஒரு தகவல்தான் எங்களுக்குத் தெரியும். அதுவரை அணியினா் காத்திருக்க வேண்டியுள்ளது. அவரது நிலை குறித்து உறுதியற்ற தகவலே எங்களிடம் உள்ளது.

ரித்திமான் சாஹாவைப் போல காயத்திலிருந்து மீளும் சிகிச்சையை தேசிய அணியின் உடற்தகுதி மேம்பாட்டாளா் நிக் வெப், பிசியோ நிதின் படேலிடம் ரோஹித் சா்மா மேற்கொண்டிருந்தால் அவரது நிலை எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அவா்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் உறுதியாகியிருக்கும். ரோஹித், இஷாந்துக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவா்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், டெஸ்ட் தொடரில் அவா்கள் விளையாடியிருக்கலாம். அது உதவியாக இருந்திருக்கும் என்று கோலி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT