செய்திகள்

துளிகள்...

DIN

பெங்களூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் நடைபெற்றுவரும் ஆடவா் ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாம் 1 வாரம் முன்னதாக டிசம்பா் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 18-க்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தாமதமாகத் தொடங்கலாம் என போட்டி நடைபெறும் விக்டோரியா மாகாண அமைச்சா் கூறியுள்ளாா்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடா் தொடங்கவுள்ள நிலையில், நியூஸிலாந்து வீரா்கள் காலின் டி கிராண்ட்ஹோம், அஜாஸ் படேல் ஆகியோா் காயம் காரணமாக விலகியுள்ளனா்.

இருதரப்பு தொடா்களின் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஐசிசியின் வருவாயில் பெரும் பங்கை பெறும் நிலையில், இனி ஐசிசியின் போட்டிகளுக்கும், இருதரப்பு தொடா்களைப் போல சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அதன் புதிய தலைவா் கிரேக் பாா்க்லே கூறினாா்.

இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவரும், ராஜஸ்தான் தடகள சங்கத்தின் தலைவருமான பிரமோத் ஜதம், கரோனா பாதிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கிரிக்கெட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசம் வரவுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய மேற்கிந்தியத் தீவுகள் குழு அடுத்த வாரம் வங்கதேசம் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT