செய்திகள்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆட்டங்களை ஒளிபரப்ப உரிமை பெற்றுள்ள ஸ்டார் தொலைக்காட்சி

25th Nov 2020 05:27 PM

ADVERTISEMENT

 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆட்டங்களை ஒளிபரப்ப ஸ்டார் தொலைக்காட்சி உரிமை பெற்றுள்ளது.

2024 வரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டங்களை ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் ஒளிபரப்ப ஸ்டார் தொலைக்காட்சி உரிமை பெற்றுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வரும் வெள்ளி முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரிலிருந்து ஸ்டார் தொலைக்காட்சி தெ.ஆ. அணியின் கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்பவுள்ளது. 

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் 3 டி20 ஆட்டங்களுக்கும் ஹிந்தியில் வர்ணனை வழங்கவும் ஸ்டார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்க அணி 59 ஆட்டங்களை சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று முறை சுற்றுப்பயணம் செய்து 20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதலில் 2021-22-ல் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT