செய்திகள்

30 நாள்களாக அணியினரைப் பார்க்காமல் இருந்தேன்: கரோனாவால் பாதிக்கப்பட்டது பற்றி சிஎஸ்கே வீரர் ருதுராஜ்

DIN

ஐபிஎல் போட்டியின்போது கரோனாவால் பாதிக்கப்பட்டது பற்றி பேட்டியளித்துள்ளார் சிஎஸ்கே வீரர் ருதுராஜ்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. எனினும் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடினார். தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்தார். இந்திய அணியில் இடம்பெறாத வீரர் ஒருவர் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்துள்ளார் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. ஆறு ஆட்டங்களில் 204 ரன்களுக்கு எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். 

ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற ருதுராஜ், கரோனாவால் பாதிக்கப்பட்டார். அந்தக் காலக்கட்டம் பற்றி கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு ருதுராஜ் பேட்டியளித்ததாவது:

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடி முடித்துவிட்டு விடுதிக்குத் திரும்பியது. அப்போதுதான் என்னால் அவர்களைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பல பரிசோதனைகளில் கரோனா உறுதியானபோது கடுப்பாக இருந்தது. இதனால் நான்கு வாரங்களை நான் இழந்தேன். எனினும் இதுவே கடைசி ஐபிஎல் போட்டி அல்ல, தொடர்ந்து விளையாடுவேன் என நம்பிக்கை கொண்டேன். 

அணி வீரர்களைப் பல நாள்களுக்குப் பிறகு சந்தித்து பேசியபோது அப்போதுதான் போனில் விடியோ அழைப்பில் பேசுவதை விடவும் நேரில் பேசுவதன் அருமையை உணர்ந்தேன். அணி வீரர்களை 30 நாள்களாக சந்திக்காமல் இருந்தேன். திடீரென அனைவரும் என்னுடன் இருந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள். இது நன்றாக இருந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT