செய்திகள்

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் இந்தியாவுக்குத் திரும்பிய காரணம் இதுதான்!

DIN

தனது தந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரைக் காண்பதற்காக இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா

ஐபிஎல் போட்டியின்போது ரோஹித் சர்மாவுக்குத் தொடை பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவர் இடம்பெறவில்லை. எனினும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். சக வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நிறைவு செய்த பிறகு இந்திய அணி வீரா்கள் தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியா வந்தடைந்தனா். எனவே அவா்கள் தனிமைப்படுத்துதல் காலத்தின்போது பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகிய இருவருமே தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகளில் இருக்கின்றனா். ரோஹித் தொடைப்பகுதி காயத்திலிருந்தும், இஷாந்த் இடுப்புக்கு மேல் பகுதி காயத்திலிருந்து மீண்டு வருகின்றனா். அவா்கள் ஆட்டத்தில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதிபெற 3 - 4 வாரங்கள் தேவைப்படும் என்று தேசிய கிரிக்கெட் அகாதெமி பிசிசிஐ-யிடம் அறிக்கை அளித்துள்ளது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு நேராக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் ரோஹித் சர்மா இந்தியாவுக்குத் திரும்பியது விமர்சனங்களை வரவழைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் சக வீரர்களுடன் இணைந்து சென்றிருந்தால் காயத்திலிருந்து மீண்டு தனிமைப்படுத்தும் காலக்கட்டத்தையும் பூர்த்தி செய்து டெஸ்ட் தொடருக்குத் தயாராகியிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் ரோஹித் சர்மாவின் தந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தந்தையைக் காண்பதற்காகவே ரோஹித் சர்மா இந்தியாவுக்குத் திரும்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் தொடரில் விளையாட அவர் ஆர்வமாக உள்ளார். இதனால் தான் பெங்களூருக்குச் சென்றுள்ளார் என்றும் ரோஹித் சர்மாவின் நிலைமை பற்றி கிரிக்கெட் செய்தியாளர் போரியா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT