செய்திகள்

நிவர் புயல்: சென்னை மக்களுக்காக அக்கறைப்படும் ஆஸி. வீரர் டேவிட் வார்னர்

25th Nov 2020 11:56 AM

ADVERTISEMENT

 

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதுச்சேரியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி அருகில் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-புதுச்சேரி முழுவதும் புதன்கிழமை (நவ.25) பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்படவுள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் மழை-வெள்ளத்தைச் சந்தித்து வரும் தமிழகம், புதுச்சேரிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் நிவர் புயலின் நிலவரம் பற்றி அறிந்துள்ள ஆஸி. அணி பேட்ஸ்மேனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், இன்ஸ்டகிராம் தளத்தில் அதுபற்றி எழுதியுள்ளார். சென்னையில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT