செய்திகள்

இந்திய அணியின் புதிய உடை: ஷிகர் தவன் வெளியிட்ட புகைப்படம்

24th Nov 2020 04:45 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் புதிய வடிவமைப்பிலான உடையை அணிந்து விளையாடவுள்ளார்கள் இந்திய வீரர்கள். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

இந்நிலையில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய வீரர்கள் இம்முறை புதிய உடை அணிந்து விளையாடவுள்ளார்கள். அந்த உடையின் புகைப்படத்தைப் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் தொடக்க வீரர் ஷிகர் தவன். பிசிசிஐயின் புதிய விளம்பரதாரர் எம்பிஎல் ஸ்போர்ட்ஸின் இலச்சினை இந்திய அணியின் உடையில் இடம்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

Tags : jersey Dhawan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT