செய்திகள்

அடிலெய்ட் டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

24th Nov 2020 05:31 PM

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அடிலெய்ட் டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

அடிலெய்டைத் தலைநகராகக் கொண்டுள்ள தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் கடந்த வாரம் ஒரே நாளில் 14 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா உள்ளிட்ட பகுதிகள் உடனடியாக தங்களை எல்லைகளை மூடிக்கொண்டன. அடிலெய்டில் இருந்து வருபவர்கள் இரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குயின்ஸ்லாந்து மாநிலம் அறிவித்தது. இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் வீரர்கள், ஆஸ்திரேலியா ஏ அணி மற்றும் பிக் பாஷ் போட்டி வீரர்கள் எனப் பலரையும் ஒரே நாளில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இருந்து விமானம் மூலமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். 

ADVERTISEMENT

இந்த மாற்றங்கள் காரணமாக பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் குறித்து சந்தேகம் எழுந்தது.

எனினும், அடிலெய்ட் டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

கடந்த வாரம் சிறிய அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. தெற்கு ஆஸ்திரேலிய அரசுடன் இணைந்து திட்டமிட்டு வருகிறோம். கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக அரசு உறுதியளித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையுடன் ஊரடங்கு முடிந்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி அடிலெய்ட் டெஸ்ட் நடைபெறும்.

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருப்பது நம் அதிர்ஷ்டம். இங்கு சமூகப் பரவல் குறைந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து கிரிக்கெட் ஆட்டங்களைச் சரியாக நடத்த திட்டமிட்டு வருகிறோம். மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமாக உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணி வீரர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து வருகிறோம் என்றார். 

Tags : Adelaide Aus vs Ind
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT