செய்திகள்

கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரபல பேட்ஸ்மேன்

23rd Nov 2020 02:54 PM

ADVERTISEMENT

 

கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து பிரபல பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஃபகார் ஸமான் நீக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி, 2 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 18 முதல் தொடங்குகிறது. 

நியூசிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. எனினும் பிரபல பேட்ஸ்மேன் ஃபகார் ஸமானுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியிருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

எனினும் கரோனா அறிகுறிகள் ஸமானிடம் தென்பட்டுள்ளதால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவதால் சூழ்நிலை கருதி நியூசிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெறவில்லை.

30 வயது ஃபகார் ஸமான் 3 டெஸ்டுகள், 47 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT