செய்திகள்

கோலியின் முடிவு சரியானது: ரவி சாஸ்திரி

22nd Nov 2020 10:14 PM

ADVERTISEMENT


முதல் குழந்தை பிறப்பு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக இந்தியக் கேப்டன் விராட் கோலி எடுத்திருக்கும் முடிவு சரியானது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஏபிசி ஸ்போர்ட் நிறுவனத்திடம் ரவி சாஸ்திரி தெரிவித்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவில் வெளியான தகவலின்படி:

"விராட் கோலி சரியான முடிவை எடுத்திருக்கிறார். இத்தகையத் தருணங்கள் மீண்டும் கிடைக்காது. அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் திரும்புகிறார். இந்த முடிவு குறித்து அவர் மகிழ்வார் என்று நினைக்கிறேன்.

கடந்த 5, 6 ஆண்டுகளில் இந்தியக் கிரிக்கெட் அணியின் பயணத்தைப் பார்த்தால், அனைவருக்கும் எவ்வித சந்தேகமின்றி தெரியும், கோலிதான் அணியை இயக்கி வருகிறார் என்பது. இந்திய அணியின் வெற்றிக்குப் பின்னணியில் அவர் இருக்கிறார். அதனால், அந்த இழப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் கூறுவதுபோல் இன்னல்கள் நிறைந்த சூழலில்தான் வாய்ப்புகள் கிடைக்கும். அணியில் ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். இது அவர்களுக்கான வாய்ப்பு" என்றார் ரவி சாஸ்திரி.

ADVERTISEMENT

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் விராட் கோலி, 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் மட்டும் விளையாடுகிறார். கடைசி 3 டெஸ்ட் ஆட்டங்களைத் தவறவிடுகிறார்.

Tags : Ravi Shastri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT