செய்திகள்

ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்குத் தலைவலியாக இருப்பார்: மேக்ஸ்வெல்

20th Nov 2020 05:29 PM

ADVERTISEMENT

 

மீண்டும் விளையாட வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்குத் தலைவலியாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

இந்நிலையில் சோனி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் கூறியதாவது:

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் விளையாட வந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இது எங்களுக்குக் கூடுதல் பலமாகவும் இந்திய அணிக்குத் தலைவலியாகவும் இருக்கப் போகிறது. இந்தியாவுக்கு எதிராக எப்போதும் அதிக ரன்களை ஸ்மித் எடுத்துள்ளார். 

இந்திய ஒருநாள், டி20 அணிகளில் ரோஹித் சர்மா இல்லாதது எங்களுக்கு நல்ல செய்தி. எனினும் கே.எல். ராகுல் போன்ற சிறந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளார்கள். ராகுலும் மயங்க் அகர்வாலும் அவ்வளவாகப் பலவீனம் இல்லாத வீரர்கள். எனினும் ஒருநாள் கிரிக்கெட் நிச்சயம் வேறாக இருக்கும். எங்களுடைய பந்துவீச்சும் பெரிய மைதானங்களும் எங்களுக்குச் சாதகமாக அமையும் என்றார். 

Tags : Smith Maxwell
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT