செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கு பெற வயது வரம்பை நிர்ணயித்தது ஐசிசி

20th Nov 2020 10:58 AM

ADVERTISEMENT

 

சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கு பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பு.

சமீபத்திய ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆடவர்/மகளிர் ஐசிசி போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், யு-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஓர் அணி நினைத்தால் எந்த வயதிலும் ஓர் வீரரை அறிமுகப்படுத்த முடியும். அதற்கு ஐசிசியிடம் அந்த அணி அனுமதி பெறவேண்டும். அசாதாரணமான சூழலில் 15 வயதுக்குட்பட்ட வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ஐசிசியிடம் விண்ணபிக்க வேண்டும். அந்த வீரரின் அனுபவம், மனநிலை, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி போன்றவற்றை ஐசிசிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாகிஸ்தானின் ஹசன் ராஸா, 14 வருடங்கள் 227 நாள்களில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் அறிமுகமாகி சாதனை படைத்தார். அவர் 1996 முதல் 2005 வரை ஏழு டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். 

இந்திய வீரர்களில் இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர், சச்சின் டெண்டுல்கர். 16 வருடங்கள் 205 நாள்களில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார். 

Tags : ICC age restriction
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT