செய்திகள்

பிரபல கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸுக்குப் பெண் குழந்தை

20th Nov 2020 04:54 PM

ADVERTISEMENT

 

நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

டி வில்லியர்ஸுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள். விரைவில் 3-வது குழந்தை பிறக்கவுள்ளதாக டி வில்லியர்ஸின் மனைவி டேனியலே கடந்த ஜூலை மாதம் தகவல் தெரிவித்தார். 

இந்நிலையில் மீண்டும் பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் டி வில்லியர்ஸ். நவம்பர் 11 அன்று குழந்தை பிறந்ததாக இன்ஸ்டகிராமில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வருகின்றன.

Tags : AB de Villiers baby girl
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT