செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஒத்திவைப்பு

20th Nov 2020 11:28 AM

ADVERTISEMENT

 

தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 2022-ல் நடைபெறுவதாக இருந்த மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 7-ஆவது ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அடுத்த டி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2022-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

2022-ம் ஆண்டு நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையும் அடுத்ததாக இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு எந்தவொரு மகளிர் ஐசிசி போட்டியும் இல்லை என்கிற குறையும் இதன்மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.

Tags : south africa T20 World Cup
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT