செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

20th Nov 2020 02:58 PM

ADVERTISEMENT

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 தொடர்களின் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

ஒருநாள், டி20 தொடர்கள்: சிட்னியில் நடைபெறும் நான்கு ஆட்டங்கள் மற்றும் கேன்பெராவில் நடைபெறும் இரண்டு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை இன்று தொடங்கியது. இரு மைதானங்களிலும் 50% அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இதையடுத்து முதல் ஒருநாள் ஆட்டம் தவிர ஏனைய 5 ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் முழுமையாக விற்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 அன்று சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1,900 டிக்கெட்டுகள் மீதமிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT