செய்திகள்

சச்சின் டெண்டுல்கருக்கு லாராவும் மே.இ. தீவுகள் வீரர்களும் அளித்த அழகான பரிசு!

17th Nov 2020 01:16 PM

ADVERTISEMENT

 

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் சச்சின். 2013 நவம்பர் 16-ல் மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி மூன்றே நாள்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சச்சினின் வியப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது.

தனது சொந்த மண்ணான மும்பையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், ஒரே ஒரு டி20 ஆட்டம் என நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி தனது முத்திரையைப் பதித்தார். டெஸ்டில் 15,921 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார் சச்சின். 

ஏழு வருடங்களுக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்கள் பிரையன் லாராவும் மே.இ. தீவுகள் வீரர்களும் தனக்குச் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் சச்சின் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

இந்த நாளில், ஏழு வருடங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர்கள் பிரையன் லாராவும் கிறிஸ் கெயிலும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியமும் எனக்கு இந்த ஸ்டீல் டிரம்மை வழங்கினார்கள். இந்த அருமையான பரிசுக்கு நன்றி. என் வீட்டுக்கு வந்திருந்தபோது லாரா இதை வாசித்துக் காண்பித்தார் என்று கூறியுள்ளார். பிறகு சச்சினும் அந்த டிரம்மை சில நொடிகள் வாசித்துக் காண்பித்து அதன் விடியோவை வெளியிட்டுள்ளார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT