செய்திகள்

எல்பிஎல் டி20 போட்டி: இலங்கையில் இர்பான் பதான்

17th Nov 2020 10:19 AM

ADVERTISEMENT

 

எல்பிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் இலங்கைக்குச் சென்றுள்ளார். 

எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது. பிறகு கரோனா தொடர்பான நிர்வாகக் காரணங்களால் போட்டியை ஒத்திவைத்தது.

இந்நிலையில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறவுள்ளது. இரு மைதானங்களில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 21 நாள்களில் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

ADVERTISEMENT

கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 

கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான், இலங்கைக்குச் சென்றுள்ளார். இத்தகவலை ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். மன்ப்ரீத் கோனி, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடும் மற்றொரு இந்தியர். 

வீரர்கள் இரு பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். விமான நிலையத்தில் ஒரு சோதனையும் விடுதிக்குள் செல்லும்போது மற்றொரு சோதனையும் நடத்தப்படும். மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். பரிசோதனைகளின் முடிவுகள் வந்த பிறகு வீரர்கள் சுயமாகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆறாவது நாளன்று மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகு ஏழாவது நாளிலிருந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என இலங்கை கிரிக்கெட் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT