செய்திகள்

என் வாழ்வில் பார்த்த மிகச்சிறந்த வீரர்: விராட் கோலியைப் புகழும் ஆஸி. பயிற்சியாளர்

13th Nov 2020 02:00 PM

ADVERTISEMENT

 

என் வாழ்வில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் என இந்திய கேப்டன் விராட் கோலியை ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் பாராட்டியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், அதன்பிறகு 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வரும் 27-ஆம் தேதி ஒரு நாள் தொடா் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து டிசம்பா் 4-ஆம் தேதி டி20 தொடா் தொடங்குகிறது. டிசம்பா் 17-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. இந்தத் தொடா் ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை வியாழக்கிழமை வந்தடைந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியைப் பாராட்டி ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியதாவது:

பல காரணங்களுக்காக என் வாழ்வில் பார்த்த மிகச்சிறந்த வீரர் விராட் கோலி தான். அவருடைய பேட்டிங்குக்காக மட்டுமில்லாமல் விளையாட்டின் மீதான அவருடைய ஆர்வத்துக்காவும் ஃபீல்டிங்குக்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஆடுகளத்தில் அவர் என்ன செய்தாலும் வெளிப்படும் ஆற்றலைக் கண்டு வியப்படைகிறேன். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதற்காகவும் அவர் மீது அதிக மரியாதை கொள்கிறேன்.

கோலி இல்லாததால் டெஸ்ட் தொடரில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், கடந்தமுறை இந்திய அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. மிகச்சிறந்த அணி என்பதால் கோலி இல்லாததற்காக ஒரு நொடி கூட அசந்துவிடக் கூடாது என்றார். 

Tags : Kohli Langer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT