செய்திகள்

இதயம் நன்றாக இயங்குகிறது: கபில் தேவ் உற்சாகம்

13th Nov 2020 05:04 PM

ADVERTISEMENT

 

தனது இதயம் நன்றாக இயங்கி வருவதாக முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.

61 வயதான கபில்தேவ், கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவராக கருதப்படுகிறாா். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்றதுடன் இந்தியாவுக்கு முதல் முறையாகக் கோப்பையையும் பெற்றுத் தந்தாா். இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார். 

நெஞ்சுவலி காரணமாக கடந்த மாத இறுதியில் புதுதில்லி ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில்தேவுக்கு இதய அறுவைச் சிகிச்சை (ஆஞ்சியோ பிளாஸ்டி) நடைபெற்றது.

ADVERTISEMENT

நள்ளிரவு 1 மணி அளவில் கபில் தேவுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவா் தில்லியில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

தற்போது, மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார் கபில் தேவ். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 1994 முதல் கோல்ப் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த கோல்ப் விளையாட்டில் மீண்டும் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில் ரசிகர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளை ட்விட்டர் வழியாக வெளியிட்டுள்ளார் கபில் தேவ். விடியோவில் அவர் கூறியதாவது:

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த வருடம் அனைவருக்கும் சந்தோஷத்தை வழங்கட்டும். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதயம் நன்றாக இயங்குகிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் என்றார்.

Tags : Kapil Dev angioplasty
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT