செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கரோனா!

10th Nov 2020 10:54 AM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் வின்ஸ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் 29 வயது ஜேம்ஸ் வின்ஸ் இடம்பெற்றிருந்தார். 13 டெஸ்ட், 16 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

நவம்பர் 14 முதல் தொடங்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் பிளேஆஃப் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாட இருந்தார் வின்ஸ். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது.

ADVERTISEMENT

அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் வின்ஸ் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். அந்தப் போட்டி தொடங்க ஒரு மாதம் இருப்பதால் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படாது எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடிய வின்ஸ், 5 ஆட்டங்களில் 155 ரன்கள் எடுத்தார். 

Tags : James Vince
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT