செய்திகள்

'இது என் கடைசி ஆட்டம் அல்ல' - தோனி

1st Nov 2020 03:25 PM

ADVERTISEMENT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை என சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். 

அபுதாபியில் இன்று நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

அப்போது தோனியிடம், 'சென்னை அணியில் இது உங்கள் கடைசி ஆட்டமா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி, 'கண்டிப்பாக இல்லை' என்று பதிலளித்தார். 

இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி இருப்பது உறுதி ஆகியுள்ளது. முன்னதாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு தோனிதான் தலைமை தங்குவார் என அணி நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : IPL 2020
ADVERTISEMENT
ADVERTISEMENT