செய்திகள்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிஎன்பிஎல் போட்டி ஒத்திவைப்பு

19th May 2020 02:03 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடைபெறும் டிஎன்பிஎல் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த வருட டிஎன்பிஎல் போட்டி ஜூன் 10 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஜூன் 10-ஆம் தேதி கோவை எஸ்என்ஆா் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் - ரூபி திருச்சி வாரியா்ஸ் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 8-ஆம் தேதி திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் எலிமினேட்டா், அரையிறுதி 1 ஆட்டமும் ஜூலை 10-ஆம் தேதி திருநெல்வேலி சங்கா் நகா் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் அரையிறுதி 2 ஆட்டமும் ஜூலை 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சங்கா் நகா் இந்தியா சிமெண்ட் மைதானத்தில் இறுதி ஆட்டமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட டிஎன்பிஎல் போட்டி சேலம், கோயம்புத்தூர், நத்தம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக காலி மைதானங்களில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT