செய்திகள்

நான் சுயநலக்காரனா?: வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாஹ் பதில்

19th May 2020 03:45 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் போன்ற சுயநலம் கொண்ட ஒரு வீரருடன் தான் விளையாடியதில்லை என ஷேன் வார்னே கூறியதற்கு ஸ்டீவ் வாஹ் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 104 முறை ரன் அவுட்களில் பங்கேற்றுள்ளார் என்று. ஒரு புள்ளிவிவரத்தை க்ரிக்இன்ஃபோ இணையத்தளம் வெளியிட்டது. அதில் வாஹ் 31 முறை ஆட்டமிழந்துள்ளார், ஆனால் அவருடன் விளையாடிய வீரர்கள் 73 முறை ரன் அவுட் ஆகியுள்ளார்கள் என்கிற தகவலும் வெளியானது. ட்விட்டரில் ராப் மூடி என்கிறவர் அது தொடர்பான விடியோவையும் வெளியிட்டார். இதைத் தயாரிக்கத் தனக்கு 24 மணி நேரம் ஆனதாகக் கூறினார்.

இதைப் பற்றி ஷேன் வார்னே கூறியதாவது: நான் பலமுறை கூறியுள்ளேன். ஸ்டீவ் வாஹை நான் வெறுக்கவில்லை. என்னுடைய சிறந்த ஆஸ்திரேலிய அணியில் அவரையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் என்னுடன் விளையாடிய வீரர்கள், ஸ்டீவ் வாஹை விடவும் சுயநலம் கொண்ட இன்னொரு வீரர் கிடையாது. இந்தப் புள்ளிவிவரம் அதை உறுதி செய்கிறது என்றார்.

ADVERTISEMENT

வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாஹ் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நீண்ட நாள் பகையாக மக்கள் இதைக் கருதுகிறார்கள். ஆனால் இது இரு நபர்களிடையேயான நீண்ட நாள் பகை. அதில் நான் கொண்டுவரப்படவே இல்லை. எனவே இதில் ஒருவர் மட்டும்தான் உள்ளார். அவருடைய கருத்துகள் அவரைப் பற்றியே பிரதிபலிக்கிறது. அதில் எனக்கொரு சம்பந்தமும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார்.

Tags : Steve Waugh
ADVERTISEMENT
ADVERTISEMENT