செய்திகள்

நான் வீட்டில் உள்ளேன், நீங்கள்?: ரசிகர்களுக்கு ஜடேஜா கேள்வி

15th May 2020 12:58 PM

ADVERTISEMENT

 

கரோனா விழிப்புணர்வு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 81,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ஜடேஜா வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக நான் வீட்டில் உள்ளேன். நீங்களும் அப்படித்தானே? கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் இன்னமும்  நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மற்றவர்களின் பாதுகாப்புக்காக நாம் வீட்டில் இருப்போம் என்று கூறியுள்ளார்.

விடியோவில் இந்திய கிரிக்கெட் அணியின் உடையை அணிந்துகொண்டுள்ள ஜடேஜா, தனது புகழ்பெற்ற வாள் போல கிரிக்கெட் பேட்டைச் சுழற்றி வெற்றியைக் கொண்டாடும் விதத்தையும் ரசிகர்களுக்குச் செய்து காண்பித்துள்ளார்.

 

Tags : COVID 19
ADVERTISEMENT
ADVERTISEMENT