செய்திகள்

மைக் டைசனுடன் மோதத் தயாராகும் ஹோலிபீல்ட்!

14th May 2020 04:29 PM

ADVERTISEMENT

 

மைக் டைசன் மீண்டும் களமிறங்குகிறாரா, நானும் தயார் எனக் களத்தில் குதிக்கவுள்ளார் ஹோலிபீல்ட்.

1984 முதல் 2011 வரை தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்தவர் அமெரிக்காவின் இவான்டர் ஹோலிபீல்ட். நான்கு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற ஒரே வீரர்.

மைக் டைசன் மீண்டும் களத்தில் குதிப்பது தொடர்பாகச் செய்திகளும் விடியோக்களும் வெளியான நிலையில் 57 வயது ஹோலிபீல்டும் மீண்டும் குத்துச்சண்டைப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார். டைசன் போல ஹோலிபீல்டும் கடுமையாகப் பயிற்சியெடுக்கும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

டைசனும் ஹோலிபீல்டும் இருமுறை மோதியதில் இரண்டிலும் ஹோலிபீல்டே ஜெயித்துள்ளார். 2-வது சண்டையில் ஹோலிபீல்டின் காதை டைசன் இருமுறை கடித்ததால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு ஹோலிபீல்ட் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

3-வது முறையாக டைசனுடன் மோத விருப்பமா என்று கேட்டதற்கு ஹோலிபீல்ட் அளித்த பதில்:

ஆமாம். அவருடன் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். நான் இதற்குத் தயாராக உள்ளேன். இந்த வயதில் என்னால் டைசனை எதிர்கொள்ள முடியும் என உறுதியாக உள்ளேன். டைசனும் என்னுடன் போட்டியிட விரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

1985 முதல் 2005 வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக இருந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த மைக் டைசன். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். எதிராளியை நாக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்றவர். இவரைத் தெரியாத விளையாட்டு ரசிகர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்குப் புகழ்பெற்றுள்ள மைக் டைசன் ஒரே ஒரு இன்ஸ்டகிராம் பதிவின் மூலம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோவில் மீண்டும் கடுமையாகப் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புத்திசாலித்தனமாகப் பயிற்சி எடுங்கள் என்று சொல்லும் டைசன், விடியோ முடிவில் நான் திரும்ப வருவேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 தொழில்முறை ஆட்டங்களில் 50-ல் வெற்றியை ருசித்தவர் டைசன். 2005-ல் ஓய்வுக்கு முன்பு கெவின் மெக்பிரைட்டுடன் தோற்றுப் போனார்.

 

Tags : Holyfield
ADVERTISEMENT
ADVERTISEMENT