செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குப் புதிய ஒருநாள் கேப்டன்

13th May 2020 05:06 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மிஸ்பா உல் ஹக்கின் ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். அஸார் அலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்கும் கேப்டனாக நீடிப்பார். பாபர் அஸாம், டி20 உலகக் கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார். 2020-21 சீஸனுக்கான கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகளைத் தவிர 9 டெஸ்டுகள், 6 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 25 வயது பாபர் அஸாம் 26 டெஸ்டுகள், 74 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ADVERTISEMENT

ஜூலை மாதம் அயர்லாந்தில் இரு டி20 ஆட்டங்களிலும் பிறகு இங்கிலாந்துக்குச் சென்று 3 டெஸ்டுகள் மற்றும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது பாகிஸ்தான் அணி.

2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்தது. பிறகு, மூத்த வீரர்களான சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகிய இரு வீரர்களுக்கும் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இரு வீரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வானார்.

Tags : Babar Azam
ADVERTISEMENT
ADVERTISEMENT