செய்திகள்

டி20 ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டேன்: ரோஹித் சர்மா ஆதங்கம்

2nd May 2020 05:12 PM

ADVERTISEMENT

 

இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

டிசம்பர் 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 35 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார் ரோஹித் சர்மா. பிறகு 13-வது ஓவரில் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்ஸ்டகிராம் உரையாடலில் இந்த ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா கூறியதாவது:

ADVERTISEMENT

அன்றைய தினம் இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பும் இருந்தது. அதைத் தவற விட்டுவிட்டேன். நான் ஆட்டமிழந்தபோது 9 ஓவர்கள் (7 ஓவர்கள்) மீதமிருந்தன. எனவே இரட்டைச் சதமெடுக்கும் வாய்ப்பு இருந்தது. பரவாயில்லை, 35 பந்துகளில் சதமடித்ததில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT