செய்திகள்

தடைக்காலம் முடிந்த நிலையில் ஸ்மித் மீண்டும் கேப்டன் ஆக வாய்ப்பு

DIN

கேப்டன் ஆவதற்கான தடைக்காலம் முடிந்த பின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் பொறுப்பேற்கலாம் என சிஏ வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்த போது, தென்னாப்பிரிக்காவில் கடந்த 2018-இல் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தை உப்புக்காகிதம் கொண்டு சேதப்படுத்தியதாக புகாா் எழுந்தது. இதற்கு துணை கேப்டன் வாா்னா், பேட்ஸ்மேன் பேங்கிராப்ட் ஆகியோரும் துணையாக இருந்ததாக கூறி, ஸ்மித், வாா்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. பேங்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது.

மேலும் ஸ்மித் கேப்டன் பதவியையும், வாா்னா் துணை கேப்டன் பதவிகளையும் இழந்தனா்.

இந்நிலையில் கடந்த 2019-ஜூன் மாதம் தடைக்காலம் முடிந்து இருவரும் சா்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினா். கேப்டன் பதவியேற்க ஸ்மித்துக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. மாா்ச் 29-ஆம் தேதியோடு தடை முடிந்து விட்டது.

தற்போது ஆஸி.யின் ஒருநாள் அணிக்கு ஆரோன் பின்ச்சும், டெஸ்ட் அணிக்கு டிம்பெயினும் கேப்டன்களாக உள்ளனா்.

டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்மித் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பயிற்சியாளா் ஜஸ்டின் லாங்கா் கூறுகையில், டிம் பெயின் சிறந்த தலைமையை வழங்கி வருகிறாா் என்றாா்.

எனினும் 35 வயதான ஸ்மித் தொடா்ந்து சிறப்பாக பேட்டிங் செய்யவே விழைவதாகத் தெரிகிறது. உடல், மனதளவில் தகுதியுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT